1. Home
  2. ஆரோக்கியம்

மக்களே உஷார்..!! நம்மில் எத்தனை பேர் சிலிண்டரின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம்.. ?

மக்களே உஷார்..!! நம்மில் எத்தனை பேர் சிலிண்டரின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம்.. ?

நாம் பொதுவாக சிலிண்டர் காலியாக போகிறது என தெரிந்தவுடன் செல்போன் மூலம் முன்பதிவு செய்கிறோம். வீட்டிற்கு சிலிண்டர் வந்ததுமே அதனை வாங்கி வைத்துவிடுகிறோம். ஆனால் சிலிண்டர் வாங்கும் போது, நம்மில் எத்தனை பேர் சிலிண்டரின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம்.. ? காலாவதியான சிலிண்டர் கூட வெடிக்கக் கூடியது என்று உங்களுக்கு தெரியுமா..? இன்றளவும் சிலிண்டர் வெடித்து விபத்து என்ற செய்தியை ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நாம் பயன்படுத்தும் எல்லா பொருளுக்கும் காலாவதி தேதி உள்ளதை போல, சிலிண்டருக்கும் காலாவதி உண்டு. ஒரு சிலருக்கு இது தெரிந்திருக்கலாம்.. ஆனால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காலியாக உள்ள சிலிண்டரால் கூட ஆபத்துகள் நேரும் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு சிலிண்டர் உருளையின் பயன்பாட்டு கால அளவு 10 ஆண்டுகள்தான்.

சிலிண்டர் இரும்பினால் ஆன ஒரு உலோகம். பொதுவாகவே கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பு அரித்துப்போய்விடும். அதே தன்மை சமையல் எரிவாயுவுக்கும் இருப்பதால் தான், குறிப்பிட்ட இடைவெளியில் காலாவதியான சிலிண்டர் உருளையை உருக்கி அதை மறுசுழற்சி செய்கின்றனர்.

சரி காலாவதியான சிலிண்டரை எப்படி கண்டறிவது..?

சிலிண்டரில் மேற்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒரு கம்பியில் சிலிண்டரின் எடை அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். மற்றொரு கம்பியில் காலாவதி தேதி குறித்த விவரங்கள் சுருக்கமாக இருக்கும். அதில் ஒரு ஆங்கில எழுத்தும் இருக்கும்.


மக்களே உஷார்..!! நம்மில் எத்தனை பேர் சிலிண்டரின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம்.. ?


A – ஜனவரி முதல் மார்ச் வரை

B – ஏப்ரல் முதல் ஜூன் வரை

C – ஜூலை முதல் செப்டம்பர் வரை

D – அக்டோபர் முதல் டிசம்பர் வரை

உதாரணமாக உங்கள் சிலிண்டரில் A23 என்று இருப்பின், மார்ச் 2023 – உடன் அது காலாவதியாகும் என்று பொருள். B-23 என்றிருப்பின் ஜூன் 2023 உடன் உங்கள் சிலிண்டர் காலாவதி ஆகிவிட்டது என்று அர்த்தம். காலாவதியான தேதிக்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக் கூடாது.

இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வரும்போது காலாவதி தேதியை பார்த்து வாங்குங்கள்.



Trending News

Latest News

You May Like