1. Home
  2. தமிழ்நாடு

ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்... தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற ஹெலிகாப்டரில் பேரன்கள் திருமண ஊர்வலம்..!!

ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்... தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற ஹெலிகாப்டரில் பேரன்கள் திருமண ஊர்வலம்..!!

மத்திய பிரதேசம் மாநிலம், போபால் மாவட்டத்தில் குரானா கிராமத்தில் வசித்து வரும் ஹேம் சிங் மற்றும் யாஷ் சிங் மண்ட்லோய்க்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரை, சாரட் வண்டி பயன்படுத்தப்படும் நிலையில், தங்களது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், இருவரும் ஹெலிகாப்டரில் தங்களது திருமண ஊர்வலத்தை நடத்தினர்.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்துவது பாரம்பரிய விழாவாகக் கலந்து விட்டதாகக் கூறும் இருவரும், வருங்கால சந்ததியினருக்கும் இதேபோன்று வாடகைக்கு ஹெலிகாப்டரில் அமர்த்தி ஊர்வலம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like