தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரிட்டன் ஜோடி!!

பிரிட்டனை சேர்ந்த ஜோடி, ஆரோவில்லில் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டு கவனம் ஈர்த்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த அலன் (28) என்பவரும், லியோ (28) என்ற பெண்ணும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் வந்து அங்கேயே தங்கினர்.
அலன் ஆரோவில்லில் விவசாய பணி செய்து வருகிறார். அவரது காதலி லியோ ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார். அவர்கள் இருவரும் தமிழ் மீதும், தமிழர் பண்பாடு, பாரம்பரியம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
எனவே, அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஆரோவில்லில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி- சேலை அணிந்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதிகளை பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
newstm.in