ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா.? சவால் விடும் புகழேந்தி!

சென்னை டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, டெபாசிட் கூட வாங்க முடியாவிட்டால், கட்சியை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு, அவரது காலில் விழுந்து வழங்க வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி பற்றி சிறுவயதில் இருந்தே தனக்குத் தெரியும் என்று கூறிய புகழேந்தி, இரட்டை இலைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சுவதாக கவலைப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்து பார்க்கவில்லை. இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸை கண்டவாறு திட்டி பதிவு போடுகின்றனர் என்று கூறிய புகழேந்தி, தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம், தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார், அதனால் வேட்பாளரை திரும்ப பெற்றோம் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு தொடர் மிரட்டல்கள் அதிகமாக வருகிறது இறுதியில் புகழேந்தி இறந்து விட்டார் என செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். தகுந்த ஆதரங்களை டிஜிபி அலுவலகத்தில் வழங்கியுள்ளேன். ஆதாரத்துடன் கொடுத்திருப்பதால் 24 மணி நேரத்தில் கைதாவர்கள் என நம்புகிறேன் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.