1. Home
  2. தமிழ்நாடு

கடலில் தங்கத்தை வீசிய கும்பல்!!

கடலில் தங்கத்தை வீசிய கும்பல்!!

ராமநாதபுரத்தில் கடலில் தங்கத்தை வீசிய கும்பலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கக் கடத்தல் நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த நாட்டுப்படகை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் படகு நிறுத்தப்படாததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது படகில் இருந்தவர்கள் சில பொருட்களை கடலில் வீசினர்.


கடலில் தங்கத்தை வீசிய கும்பல்!!

விரைந்து சென்ற அதிகாரிகள் படகில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர். கடலில் வீசப்பட்ட பொருட்களை நீர்மூழ்கி வீரர்களை கொண்டு மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் வீசப்பட்டது பல கோடி மதிப்பிலான தங்கமாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நாகூர்மீரான் என்பவர் மீது தங்கக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like