1. Home
  2. தமிழ்நாடு

கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்!!குடும்பத்தோடு தீ வைத்து எரிப்பு..!

கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்!!குடும்பத்தோடு தீ வைத்து எரிப்பு..!

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவரது மனைவி தமிழரசி (31). இந்த தம்பதிக்கு 8 மாத ஹாசினி என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் தமிழரசியின் அக்கா தனலட்சுமி குடும்ப பிரச்னை காரணமாக கணவர் சர்குருவை விட்டு தங்கை வீடான தமிழரசி வீட்டிற்கு 4 குழந்தையுடன் வந்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் சர்குரு தனது மனைவி இன்று சந்தித்து சண்டை போட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீதும் தடுக்க சென்ற தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத பெண் குழந்தை ஹாசினி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் 2 பச்சிளம் பெண் குழந்தை உட்பட தமிழரசி மற்றும் சர்குரு உள்ளிட்ட 4 பேரும் தீயில் எரிந்து உயிரிழந்தனர். இதில் தனலட்சுமி மட்டும் தீ காயத்துடன் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது மனைவியின் அக்கா குடும்பத்தை தற்போது உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார் என்று அருகில் உள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள். குடும்பப் பிரச்சனையில் தனது மனைவியிடம் சண்டை போட்டுகொண்டு அக்கா வீட்டிற்கு வந்த சர்குரு தனது மனைவியையும், அக்காவையும், மற்றும் அவரது குழந்தை, மற்றும் அக்கா குழந்தைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.


கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்!!குடும்பத்தோடு தீ வைத்து எரிப்பு..!

குடும்ப பிரச்னை காரணமாக மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்த உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Trending News

Latest News

You May Like