1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்..!!

அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்-27ல் தேர்தல் நடைபெற உள்ளது.இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும், நேற்றுவரை மொத்தம் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, அதிமுகவில் வேட்பாளர் சர்ச்சை நிலவி வந்த நிலையில், நேற்று முடிவுக்கு வந்தது. அதன்படி, இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசு தான் என பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்..!!

இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் முன்கூட்டியே வாபஸ் பெறப்பட்டார்.

இந்நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் பிரச்சாரத்தை காலை தொடங்கினார். அதிமுகவில் வேட்பாளர் குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில், தென்னரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.

Trending News

Latest News

You May Like