1. Home
  2. சினிமா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை..!!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை..!!

தென்னிந்தியாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை ஹனிரோஸ்.மலையாளத் திரையுலகைச் சேர்ந்த அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக ஹனிரோஸ் மாறியுள்ளார். இந்த படத்தின் வெற்றி விழாவில் பாலகிருஷ்ணாவுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி , மல்லுக்கட்டு , கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை..!!

இந்நிலையில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் “மைஸி ஃபியூச்சர்” எனும் புது வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை திறக்க சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் சென்றார். இதனை அறிந்து சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் குவிந்தனர். இதற்கிடையில் கடையை திறந்து விட்டு ஹனிரோஸ் திரும்ப புறப்பட்டார்.

அப்போது செல்பி எடுப்பதற்காக ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். எனினும் காவல்துறையினர் மற்றும் பவுன்சர்களால் செல்பி எடுத்த ரசிகர்களை தடுக்க முடியவில்லை. ஒரு வழியாக ஹனிரோஸ் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார். இதுகுறித்த வீடியோவை ஹனிரோஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது..



Trending News

Latest News

You May Like