1. Home
  2. தமிழ்நாடு

டி.பி.கஜேந்திரன் உடல் இன்று தகனம்!!

டி.பி.கஜேந்திரன் உடல் இன்று தகனம்!!

மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் உடல் இன்று வடபழனியில் தகனம் செய்யப்படுகிறது.

நடிகரும், பிரபல இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் 1988ஆம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், பாண்டிய நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.


டி.பி.கஜேந்திரன் உடல் இன்று தகனம்!!

டி.பி.கஜேந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழர். எனவே, முதலமைச்சர் அண்மையில், டி.பி.கஜேந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் காலமானார்.

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 11 மணிக்கு வடபழநியில் உள்ள ஏ.வி.எம் சுடுகாட்டில் டி.பி.கஜேந்திரன் உடல் தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like