1. Home
  2. சினிமா

பிரபல தமிழ் திரைப்பட பாடகி மரணம்!!

பிரபல தமிழ் திரைப்பட பாடகி மரணம்!!

பிரபல பின்னணி திரைப்படப்பாடகி வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78.

வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. இவர், 1971இல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் பாடியுள்ளார்.

இவர் தனியாக ஆல்பம், பக்தி பாடல்களும் பாடி வந்துள்ளார். தமிழில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், கவிஞர் வாலி எழுத்தில் வெளியான 'மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..' என்ற பாடலை பாடி இவர் பிரபலமானார்.


பிரபல தமிழ் திரைப்பட பாடகி மரணம்!!


தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ள வாணி ஜெயராம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு மத்திய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் நம்மை விட்டு மறைந்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like