1. Home
  2. தமிழ்நாடு

சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்திய அமைச்சர்..!!

சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்திய அமைச்சர்..!!

அண்ணாவின் 54-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மையங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டியினை துவக்கி வைப்பதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றார்.

போட்டிகளை துவக்கி வைக்கும் முன்னர் அவர் ஏற்கனவே சிலம்பக் கலையில் அதிகம் ஈடுபாடு உள்ளவர் என்பதால் மைதானத்தில் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்தினார். இதனை அடுத்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அவர் துவக்கி வைத்தார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ, மாணவர்களிடையே உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.



Trending News

Latest News

You May Like