மதுக்கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!!
வள்ளலார் நினைவு தினைத்தையொட்டி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளையொட்டி நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in