1. Home
  2. தமிழ்நாடு

இனி பொது அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும்..!!

இனி பொது அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும்..!!

பாராளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும். பான் கார்டு இனி முக்கிய அரசுத்துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும்.

மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்று இனி பான் கார்டை அடையாள அட்டையாகவும், முகவரி ஆதாரமாகவும் பயன்படுத்த முடியும்.

Trending News

Latest News

You May Like