1. Home
  2. சினிமா

பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!

பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!

திரைப்படம் தாமதமாவதால் நடிகை சமந்தா பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவர் கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் என்கிற தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

நோய் பாதிப்பு ஏற்பட்ட போது அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படம், வீடியோக்களை சமந்தா வெளியிட்டார்.




சாகுந்தலம் திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் அதற்கான புரமோஷன் வேலைகளில் அவர் கவனம் செலுத்தி வந்தார். அதே போல் அமேசான் ப்ரைம் தயாரிக்கும் ஆக்ஷன் வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பல தடைகளை கடந்து சமந்தா மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்து வந்த குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.


பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!


முன்னதாக ரசிகர் ஒருவர் குஷி படம் என்னவாயிற்று என்று சமந்தாவிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.



newstm.in

Trending News

Latest News

You May Like