அதள பாதாளத்தில் எல்ஐசி!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் இன்று 8 சதவீதம் சரிந்து 601 ரூபாய்க்கு விற்பனையானதால் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியிருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது என்று கூறிய ஹிண்டன்பா்க், அதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் தெரிவித்தது.
ஆனால் ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் பதில் அளித்தது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்று அதானி குழுமம் தரப்பில் கூறப்பட்டது.
எங்கள் கேள்விகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. தேசியவாதம் என்ற போர்வையில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்று ஹிண்டன்பா்க் காட்டமாக பதில் அளித்தது.
இந்நிலையில், அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் பெருமளவு முதலீடு செய்து இழப்பை சந்திதுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் அதற்கு எல்ஐசி நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், எல்ஐசியின் பங்கு விலை 8 சதவீதம் சரிந்து 601 ரூபாய்க்கு விற்பனையானது. எல்ஐசி பங்குகள் சந்தைக்கு அறிமுகமான விலை 945 ரூபாய். ஜனவரி 25ஆம் தேதி எல்ஐசியின் ஒரு பங்கின் விலை 701 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
உதாரணமாக, ஒருவர் ஒரு லட்ச ரூபாய்க்கு எல்ஐசி பங்குகள் வாங்கியிருந்தால் அதன் இன்றைய விலை 63,000 ரூபாய் மட்டுமே. இதனால் முதலீட்டாளர்கள் எல்ஐசி மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
newstm.in