அரை நிர்வாணமாக பெண் ரகளை..!!
இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் அபுதாபியில் இருந்து மும்பைக்கு செல்லும் விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தொடர்ந்து விமானம் புறப்பட்டவுடன் அவர், தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
அதற்கு அவர்கள் மறுத்தபோது, மதுபோதையில் இருந்த பாவ்லோ விமான பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக அவர் விமானத்தில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து விமானி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் விமானம் தரையிறங்கியதும் மும்பை போலீசார் பாவ்லோ பெருசியோவை கைது செய்தனர். விமானங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் விமான பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தனது ஆடைகள் சிலவற்றை அணியாமல் விமானத்தில் அங்கும் இங்குமாக நடக்கத் தொடங்கினார். அந்தப் பெண்ணை அடக்கி வைப்பதற்கு ம சிறிது நேரம் சலசலப்பு தொடர்ந்தது என்று அந்த அதிகாரி கூறினார் இறுதியாக, அதிகாலை 4.53 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அந்த பெண் விமானம் ஏர் விஸ்தாராவின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.