முன்பின் தெரியாத நபர்களிடம் சமூக வலைத்தளங்களில் பேசிய கல்யாணமான பெண்ணிற்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!
டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீசிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அந்த பெண் கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் ராகவ் என்ற நபர் பிரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து பிரெண்டாகியுள்ளார். பின்னர் இருவரும் இன்டாவில் சாட் செய்ய ஆரம்பித்து செல்போன் எண்களை பகிர்ந்துள்ளனர். பின்னர் வாட்ஸ்ஆப் மூலமும் தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து ராகவ் அந்த பெண்ணிடம் அன்பாக பேசி அவரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இருவரும் ஒரு கட்டத்தில் வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கி நிலையில், ஒரு முறை தன்னிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச வேண்டும் என்று பெண்ணை தூண்டியுள்ளார். பெண்ணும் அவரின் பேச்சை கேட்டு ஆடைகளை களைந்து வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது அதை பதிவு செய்து கொண்ட ராகவ், அந்த வீடியோவை வைத்து பெண்ணை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் 1.25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் 70 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என அவர் கேட்க, தன்னால் தர முடிவில்லை என மறுத்துள்ளார். உடனே, பெண்ணின் வீடியோ அவரது கணவருக்கு ராகவ் அனுப்பியுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவ விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பெண் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க அதன் பேரில் போலீசார் குற்றவாளி ராகவை டெல்லி கரோல் பகுதியில் கைது செய்தனர். 25 வயதான ராகவ் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள இவர் ரயில்வேயில் ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் பல போலி கணக்குகளை தொடங்கி பெண்கள் பலருக்கு மெசேஜ் அனுப்பி பழகி வந்தது விசாரணையில் அம்பலமானது. அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 3 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கையாக பழக வேண்டும் என டெல்லி டிசிபி ஸ்வேதா சவுஹான் அறிவுறுத்தியுள்ளார்.