1. Home
  2. தமிழ்நாடு

காதலனோடு இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

காதலனோடு இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

மும்பையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடலின் கழிமுகப்பகுதியில் 17 வயது சிறுமியும் அவரின் காதலனும் வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் தங்களை போலீஸ் என்று அவர்களிடம் கூறினர்.

இந்த இடத்துக்கு தனியாக ஏன் வந்தீர்கள் என மிரட்டி, விசாரிக்க வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர். அந்த சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அந்த சிறுமியிடம் காதலனுக்கு போன் செய்து, சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும், தன்னை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறும்படி மிரட்டினர். அதன்படி சிறுமியும் கூறியுள்ளார்.


காதலனோடு இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!


அதன்பிறகு அந்த நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் காதலரை அழைத்துச்சென்ற மற்றொரு நபர் அவரை அடித்து ரயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் சிறுமி இருந்த இடத்திற் வந்துள்ளார். அந்த நபரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ரயில் நிலையத்தில் விட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியை அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


காதலனோடு இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!


பின்னர் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த 30 மணி நேரத்தில் பண்டேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like