1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் உதவித்தொகை.. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

விரைவில் உதவித்தொகை.. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, 2.11 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.


இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து 24 ஆயிரத்து 951 பேர் காத்திருக்கின்றனர். தற்போது, மாவட்ட உதவித் தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வழியே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கீழ் பயன்பெறும் பயனாளிகள், தங்கள் பெயருடன், ஆதார் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

விவரங்களை விரைவாக தெரிவித்தால், விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வசதியாக அமையும். எனவே, அரசின் இந்த நடவடிக்கைக்கு, அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like