அதிமுக வழக்கு இன்று விசாரணை!!
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் கடந்த வாரம் முறையிடப்பட்டது.
இதனையடுத்து இன்று முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனையடுத்து இன்று சற்று நேரத்தில், அதாவது காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. பொதுக்குழு வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இருதரப்பினரும் வேட்பாளரை களமிறக்க உள்ளதால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஈபிஎஸ் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
newstm.in