1. Home
  2. சினிமா

ஷாக்கிங் நியூஸ் ..!! பிரபல நடிகர் கவலைக்கிடம்..!!

ஷாக்கிங் நியூஸ் ..!! பிரபல நடிகர் கவலைக்கிடம்..!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தெலுங்கு தேசம் கட்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் 'யுவ களம்' என்ற பெயரில் ஆந்திராவில் பேரணி நடத்தி வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்(ஜன.27) நடந்த பேரணியில் ஜூனியர் என்டிஆரின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா கலந்துகொண்டார்.

பேரணியின் போது தாரக ரத்னாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


ஷாக்கிங் நியூஸ் ..!! பிரபல நடிகர் கவலைக்கிடம்..!!

மருத்துவமனையில் தாரக ரத்னாவை சந்தித்த பின் அவரது மாமா நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூறுகையில், "தாரக ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு உள்ளது. கவலைப்பட ஒன்றும் இல்லை. மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்". எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தாரக ரத்னாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாரக ரத்னா 'மெலினா' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தாரக ரத்னாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாரக ரத்னா 'மெலினா' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like