1. Home
  2. தமிழ்நாடு

ஒன்றிய அமைச்சரின் சகோதரர் ஐசியூவில் மரணம்!!

ஒன்றிய அமைச்சரின் சகோதரர் ஐசியூவில் மரணம்!!

பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் ஆதம்பூர் பகுதியில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி சவுபேயின் சகோதரர் நிர்மல் சவுபே குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை உறவினர்கள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.


ஒன்றிய அமைச்சரின் சகோதரர் ஐசியூவில் மரணம்!!

அவரை உடனடியாக ஐசியூவில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில், சவுபேயின் உறவினர்கள், மருத்துவமனை மீது குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். நிர்மல் சவுபேயின் உறவினரான சந்தன் கூறுகையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். ஆனால், ஐசியூவில் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கூட இல்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையின் சூப்பிரெண்டு டாக்டர் அசீம் தாஸ் கூறுகையில், நெருக்கடியான சூழலில், நோயாளி கொண்டு வரப்பட்டார். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது. மூத்த மருத்துவர் அவருக்கு வேண்டிய மருந்துகளை கொடுத்து உள்ளார். அதன்பின்பு அவர், ஐசியூவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. 2 மருத்துவர்களை சஸ்பெண்டு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

டி.எஸ்.பி. அஜய் குமார் சவுத்ரி சம்பவம் குறித்து அறிந்து சென்று, உறவினர்களை சமரசப்படுத்தினார். அவர் கூறும்போது, புகார் எங்களுக்கு கிடைக்கும்போது, விசாரணை செய்வோம். அலட்சியத்துடன் நடந்து கொண்ட யாராக இருப்பினும் நடவடிக்கை எடுப்போம். அமளி ஏற்படுத்தி, மருத்துவர்களை விரட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.


Trending News

Latest News

You May Like