1. Home
  2. விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!!

சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

இப்போட்டியில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!!

சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில் தரவரிசையில் 25ஆவது இடத்தில் இருக்கும் எலினா ரைபகினா, தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் .

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 4 - 6, 6- 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like