வழக்கறிஞர் மூலம் ரஜினிகாந்த் விடுத்துள்ள எச்சரிக்கை!!
தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே போல் அவரது மகள் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவரது படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது வழக்கறிஞர், இளம்பாரதி மூலமாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்தப்படுவதாக அறிவிப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அவரது பெயரை, புகைப்படத்தை, குரலை பயன்படுத்தி பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in