1. Home
  2. சினிமா

தாடி பாலாஜி மனைவி கைது!!

தாடி பாலாஜி மனைவி கைது!!

பக்கத்து வீட்டில் வசிப்பவரின் காரை கல்லால் தாக்கிய குற்றச்சாட்டில் தாடி பாலாஜியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

காமெடி நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து கோரினர். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

அதே போல் பிக் பாஸ் வீட்டிலும் இவர்களது களேபரம் தொடர்ந்தது. இந்நிலையில், பாலாஜி மனைவி நித்யா, மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.


தாடி பாலாஜி மனைவி கைது!!


அவருக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த நித்யா எதிர்வீட்டில் வசிப்பவரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தினார்.

எதிர் வீட்டில் வசிப்பவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நித்யா கல்லால் காரை தாக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் அளித்தார்.


தாடி பாலாஜி மனைவி கைது!!


வழக்குப்பதிவு செய்த போலீஸார் நித்யாவை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like