1. Home
  2. விளையாட்டு

கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்க்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் திருமணம்..!!

கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்க்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் திருமணம்..!!

சிறந்த இளம் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பவர் பாபா அபராஜித். இரட்டை சகோதரரான பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபராஜித் ஆகிய இருவருமே தொடர்ந்து ஐபிஎல், TNPL உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் பங்கெடுத்து ஆடி வருகின்றனர். அதிலும் பாபா அபராஜித் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கவும் செய்திருந்தார்.

17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானவர் பாபா அபராஜித். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதனைத் தொடர்ந்து 2013-14 துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கு எதிராக தென் மண்டல அணியில் களம் கண்ட அபராஜித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

இந்த நிலையில், இளம் கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதுவும் தமிழில் பிரபல குணச்சித்திர நடிகராக இருந்து வரும் தலைவாசல் விஜய்யின் மூத்த மகள் ஜெயவீணாவுடன் தான் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் பாபா அபராஜித் சிறப்பாக திகழ்வது போல, ஜெயவீணா ஒரு நீச்சல் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இவர் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.


கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்க்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் திருமணம்..!!



இந்த நிலையில், நிச்சயதார்த்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பாபா அபராஜித் மற்றும் ஜெயவீணா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Trending News

Latest News

You May Like