1. Home
  2. சினிமா

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!

மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

1970 மற்றும் 1980களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இவர், 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.


பொதுவாக, ரஜினி படம் என்றாலே ஜூடோ ரத்னம்தான் ஸ்டண்ட் மாஸ்டர் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். அந்த வகையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குனராக இருந்திருக்கிறார். இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான 'பாண்டியன்' படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


அப்போது ரஜினிகாந்த பேசும் போது, “ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்னம். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like