1. Home
  2. சினிமா

வசூலில் புதிய சாதனை படைத்த பதான்!!

வசூலில் புதிய சாதனை படைத்த பதான்!!

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் சர்ச்சைகளை தாண்டி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று வெளியானது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடலில் தீபிகா, காவி நிறத்தில் நீச்சல்உடை அணிந்து கவர்ச்சியாக ஆடியுள்ளார்.

இதற்கு பாஜகமற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்தன. அதை நீக்கவில்லை என்றால் படத்தை வெளியிட மாட்டோம் என்று கூறின. ஆனால் அந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.




இத்திரைப்படம் உலகம் முழுவதும் 8000 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டது. சில இடங்களில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனாலும், படம் உலகம் முழுக்க முதல் நாள் ரூ.106 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.55 கோடியை வசூலித்து, பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங் படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.


வசூலில் புதிய சாதனை படைத்த பதான்!!


முன்னதாக, ஆமீர்கானின் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படம் உலக அளவில் ரூ.79 கோடியுடன் பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங்காக இருந்தது. அந்த சாதனையை ஷாருக்கானின் ‘பதான்’ முறியடித்துள்ளது.

அதே போல் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படம் இந்தியாவில் முதல் நாளன்று ரூ.50 கோடியை வசூலித்தது. அந்த சாதனையையும் பதான் முறியடித்துள்ளது. படம் ஒருவாரத்திற்குள் ரூ.300 கோடியை வசூலிக்கும் என கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like