1. Home
  2. தமிழ்நாடு

“காரி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன்” : தமிழிசை ஆவேசம்!!

“காரி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன்” : தமிழிசை ஆவேசம்!!

குடியரசு விழா நிகழ்ச்சிக்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை புதுச்சேரிக்கு வந்தார். கொடி ஏற்றி வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் சட்டமீறல், விதி மீறல் நடந்துள்ளது, கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை தெலங்கானா அரசு நடத்தவில்லை என்று கூறினார்.

ஆனால், 5 லட்சம் பேரை கொண்டு கூட்டம் நடத்தினார்கள். அப்போது கொரோனா பரவல் இல்லையா என கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் தெலங்கானாவில் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.


“காரி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன்” : தமிழிசை ஆவேசம்!!

தெலுங்கானா மக்கள் தன் மீது அதிக நேசம் வைத்துள்ளனர் என்று கூறிய தமிழிசை, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என நினைத்து தெலங்கானா அரசு கவர்னரை எதிர்க்கிறது என்று கூறினார்.

தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும், அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

தூண்டுதலின் பேரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விடுவோம் என்ற வசனம் போல செயல்படுகிறேன் என்று தமிழிசை ஆவேசமாக தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like