பிரபல நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதி..!!

பிரபல நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதி..!!
X

பிரபல நடிகர் மனோபாலாவை, நகைச்சுவை நடிகராத் தான் இன்றைய தலைமுறை பார்க்கிறது. ஆனால், அவர் எவ்வளவு பெரிய இயக்குனர், எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ஒரு காலத்தில் பரபரப்பாக காணப்பட்ட பிஸி இயக்குனர், இன்று நகைச்சுவை நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவரை நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Next Story
Share it