குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்..!!

குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்..!!
X

நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது. அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.

Next Story
Share it