1. Home
  2. தமிழ்நாடு

ஒருங்கிணைந்து செயல்படுவோம்.. பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து..!

ஒருங்கிணைந்து செயல்படுவோம்.. பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து..!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என, குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது 74-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “குடியரசு தின வாழ்த்துகள்.


இந்தத் தருணம் சிறப்பானது. காரணம், நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like