பிரபல தமிழ் பாடகி, ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளருக்கு பத்ம விருதுகள்!!
மத்திய அரசு நேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது.
அதில், கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நீண்ட காலமாக திரைத்துறையில் இருந்தாலும் கூட, தற்போது தான் பல்வேறு அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. அண்மையில் இவர் கோல்டன் குளோப் விருது பெற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இது பத்ம விருதுகளில் முதன்மையானது.
வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் ஓஆர்எஸ் மருந்து கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in