ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? - ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? - ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்..!!
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று (ஜன.25) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விருப்பமனுவை, உங்களிடம் கூறி விட்டு தான் நாங்கள் வாங்குவோம். எங்களுடன் இணக்கமாக இருக்கக்கூடிய கட்சிகள், எங்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்திக்கிறார்கள், நாங்களும் சந்திப்போம்." என தெரிவித்தார்.

Next Story
Share it