திருவண்ணாமலையில் மெய்சிலிர்த்த பக்தர்கள்!! ஆனந்த தாண்டவம் ஆடிய துருக்கி நாட்டு பெண்..!!

திருவண்ணாமலையில் மெய்சிலிர்த்த பக்தர்கள்!! ஆனந்த தாண்டவம் ஆடிய துருக்கி நாட்டு பெண்..!!
X

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த ஆலயத்தில் மலையே சிவலிங்கமாக திகழ்கிறது. இந்த கோவிலிலுக்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்குகின்றனர்.அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை தினமான 22-ம் தேதியன்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே ஐய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே தான் காணப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாமலையாரை தரிசிக்க வந்த துருக்கி நாட்டை சேர்ந்த மேர்வீன், செமி தம்மதியினர் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றிவந்தனர். பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் அண்ணாமலையார் சன்னதி முன்பு மேர்வின் திடீரென ஆன்மீக பாடலுக்கு நடனமாடினார். இதனை அவரது கணவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

சிவ பெருமானை நினைத்து பய பக்தியுடன் அபிநயத்துடன் வெளிநாட்டு பெண் நாட்டியமாடுவதை அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story
Share it