பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏன் மார்பகங்கள் வலிக்கிறது?

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏன் மார்பகங்கள் வலிக்கிறது?
X

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஒரு வலி மிகுந்த பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த 5 நாட்கள் என்பது பெண்களுக்கு இயற்கையான நரகம் என்றே கூறலாம். சிலருக்கு உடம்பு வலி, அடிவயிற்று வலி, வாந்தி, பசியின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளைக் கூட சந்திக்கின்றனர். ஆனால் இந்த பிரச்சினைகளோடு மட்டும் மாதவிடாய் முடிவதில்லை. சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மார்பக வலிக்கூட ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கடுமையான மார்பக வலியையும் இந்த மாதவிடாய் வலியோடு சேர்த்து அனுபவித்து வருகிறார்கள். மார்பகத்தில் புண்கள், மென்மை மற்றும் வீக்கம் போன்றவை இந்த கால கட்டத்தில் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் அன்றாட வேலைகள் பாதிப்படையக் கூடும். மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி ஒரு வித வலியை உண்டாக்குகிறது. இந்த வலி மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னதாகவே ஏற்படுகிறது. இப்படி மார்பகத்தில் ஏற்படும் வலி ஆபத்தானதா?மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். இதனால் மார்பகத்தில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து மார்பகத்தில் மாற்றங்களையும் வலியையும் உண்டாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மார்பக நாளங்களில் விரிவை ஏற்படுத்துகிறது. உங்க மாதவிடாய் காலங்களில் 1 வாரத்திற்கு முன்பு புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பால் மார்பகத்தில் உள்ள பால் சுரப்பிகள் பெருகும். இதனால் அந்த பகுதியில் மார்பக வலி உண்டாகிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மார்பக வலியை குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இருப்பினும் வேறு சில அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் அது மார்பக புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பகத்தில் அல்லது அக்குள்களில் கட்டிகள் காணப்படுதல், சிவந்து இரத்தம் வடிவது, சீழ் வடிவது, தூங்குவது கூட கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது. மார்பகங்களில் அளவு மாற்றம், காம்புகள் உள்நோக்கி திரும்புதல், சிவத்தல், மார்பக தோலில் மாற்றம் போன்றவை தென்பட்டாலும் உடனே நீங்கள் பரிசோதனை செய்வது நல்லது.

Next Story
Share it