சிதம்பரத்தில் சோகம்.. ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ மாரடைப்பால் மரணம்..!

சிதம்பரத்தில் சோகம்.. ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ மாரடைப்பால் மரணம்..!
X

சிதம்பரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் மகேந்திரன் (58). இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து உடன் இருந்து போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it