நாயை காண குவிந்த பொதுமக்கள் ..!! அப்படி என்ன ஸ்பெஷல் அந்த நாயிடம் தெரியுமா ?

நாயை காண குவிந்த பொதுமக்கள் ..!! அப்படி என்ன ஸ்பெஷல் அந்த நாயிடம் தெரியுமா ?
X

பெல்லாரியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான காகசியன் ஷெப்பர்ட் என்ற நாயினை பார்க்க மக்கள் குவிந்தனர்.

கடாபோம் ஹைடர் என்ற நாய் 14 மாத வயதுடையது என்றும் இது இந்தியாவில் உள்ள அரிய வகை நாய் என்றும் சதீஷ் கூறினார். சமீபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், நாய்க்கு ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தார். இதுபற்றி பேசிய நாயின் உரிமையாளர் சதீஸ், இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட நாய் இதுதான்.இதன் பராமரிப்புக்காக தினமும் 2,000 ரூபாய் செலவிடுகிறேன். பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு உயர்தர, குளிரூட்டப்பட்ட காரில் கொண்டு சென்றோம். இதற்கு முன்பு என்னிடம் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கொரிய மாஸ்டிஃப் மற்றும் ரூ.8 கோடி மதிப்புள்ள அலாஸ்கன் மாலாமுட் இருந்தது. என்னிடம் இரண்டு காகசியன் ஷெப்பர்ட் நாய்க்குட்டிகள் உள்ளது. அவற்றை தலா 5 கோடி ரூபாய்க்கு விற்க மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்’ என்று கூறினார்.


Next Story
Share it