இது அல்லவா காதல்..!! காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

இது அல்லவா காதல்..!! காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
X

உ.பி யை சேர்ந்தவர் சோனால். இவர் அங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு சனா என்பவர் வாடகைக்கு வந்தார். அவர் அதே வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தார்.சோனலும், சனாவுக்கும் நட்பு ஏற்பட்டு நல்ல தோழிகளாக மாறினர். இருப்பினும், சோனாலின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் விரும்புவதை ஏற்காததால், சனாவை வெளியே செல்லுமாறு கூறினர்.

அரசுப் பணியில் இருந்த சனா, 2016ல் ஜான்சிக்கு மாற்றபட்டார். ஓராண்டுக்குப் பிறகு, அவருக்கு அரசுக் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் வெளியேற முடிவு செய்தார். சனா வெளியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, சோனலும் சனாவுடன்தான் வாழ்வேன் என கூறி வீட்டை விட்டு வெளியேறினார். பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர்கள் டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்றனர். ஜூன் மாதம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக சோஹைல் கான் என சனா மாற்றிக் கொண்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, சோஹைல் கானின் மனைவியாக அனைத்து மருத்துவ ஆவணங்களிலும் சோனால் கையெழுத்திட்டார். இந்நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. காரணம் அதே மருத்துவமனையில் தன்னுடன் பணிபுரிந்த ஒரு கியான் என்பவருடன் சோனாலுக்கு தொடர்பு ஏற்பட்டது.

ஒருநாள் சண்டைக்கு பிறகு சோனால் கியானுடன் வாழ விரும்புவதாகக் கூறினார். சோனால் சனாவை விட்டுவிட்டு வீடு திரும்பினார்.அவரும் அவரது குடும்பத்தினரும் சனா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story
Share it