தொண்டர் மீது கல் வீசிய திமுக அமைச்சர்.. வீடியோ வெளியாகி சர்ச்சை..!

தொண்டர் மீது கல் வீசிய திமுக அமைச்சர்.. வீடியோ வெளியாகி சர்ச்சை..!
X

ஆய்வுப் பணிக்குச் சென்றபோது நாற்காலி எடுத்து வர தாமதமானதால் அத்திரமடைந்த அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர் மீது கல் வீசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலிகளை எடுத்து வர கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.


அப்போது, கட்சி நிர்வாகிகள் அதிகமானவர்கள் இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி தொண்டரை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக திட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Next Story
Share it