ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
X

சென்னையில் இன்று (ஜன. 24-ம் தேதி) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 42,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று (ஜன. 23-ம் தேதி) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.5,323-க்கு விற்பனையானது. சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 42,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை ஆனது.


இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (ஜன. 24-ம் தேதி) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து, 5,355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 42,840 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, கிராமுக்கு 70 பைசா குறைந்து, 74.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story
Share it