1. Home
  2. தமிழ்நாடு

ஏழைகளுக்கு இலவசமாக ஆடைகளை வாரி வழங்கும் அனோகா மால்..!!

ஏழைகளுக்கு இலவசமாக ஆடைகளை வாரி வழங்கும் அனோகா மால்..!!

லக்னோவின் ரஹிம்நகரில் உள்ள அனோகா மாலில், ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு உள்ளன. டாக்டர் அஹ்மத் ரஸா கான் என்பவர், ஏழைகளுக்காக இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளார்.இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால்.

யாரிடமும் உதவி கேட்காமல் இங்குள்ள பொருட்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. லக்னோவின் ரஹீம் நகரில் இந்த மால் இயங்கி வருகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் மட்டும் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற கம்பளி ஆடைகளை ஏழைகளுக்கு இந்த மால் வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த இலவசத் திட்டத்தை மால் செயல்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like