நடிகர் பிரேம்ஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா ? தீயாய் பரவும் வீடியோ!

நடிகர் பிரேம்ஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா ? தீயாய் பரவும் வீடியோ!
X

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி.பிரேம்ஜியின் அண்ணன் பிரபல இயக்குநரான வெங்கட் பிரபு ஆவார்.இவர் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் காமெடியனாக நடித்திருப்பார்.

2022 -ம் ஆண்டில் பிரின்ஸ், மன்மத லீலை போன்ற படங்களில் நடித்திருந்தார், ஆனால் இரண்டு படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.நடிகர் பிரேம்ஜி, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் பிரேம்ஜி. கடைசியாக மன்மத லீலை என்ற படத்திற்கு இசையமைத்தார்.

43 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் தான் ஒரு முரட்டு சிங்கிள் என அடிக்கடி பதிவிட்டு வருகிறார் பிரேம்ஜி.திருமணம் குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு சரியான பதில் தராமல் சென்றுவிடுவார்.

இந்நிலையில் பாடகி வினைட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் நடிகர் பிரேம்ஜியை கட்டியணைத்தப்படி உள்ள வினைட்டா மீண்டும் என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.. மேலும் அந்த புகைப்படத்தில் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story
Share it