1. Home
  2. தமிழ்நாடு

இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!

இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.

அதைத் தொடர்ந்து பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு பொருளாக மாறியது.

ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் ஆளுநரின் போக்கை எதிர்த்து, குடியரசு தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!


அதன்பிறகு தாமதமாக ஆளுநர் தரப்பிலிருந்து விளக்க கடிதம் வெளியிடப்பட்டது. அதில் தான் தமிழகம் என குறிப்பிடலாம் என சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என விளக்கமளித்தார்.

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தமிழ்நாடு இலச்சினை இருக்கிறது. அதே போல் தமிழகம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என அச்சடிக்கப்பட்டுள்ளது.


இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!


இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!


சென்ற முறை இந்திய அரசின் இலச்சினையும் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like