கே.எல்.ராகுலுக்கு நாளை திருமணம்!?

கே.எல்.ராகுலுக்கு நாளை திருமணம்!?
X

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.எல்.ராகுலும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும் காதலித்து வருகின்றனர். மிக பிரபல நட்சத்திர ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இருவருக்கும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதை பெண்ணின் தந்தை சுனில் ஷெட்டி உறுதி செய்தார். சுனில் ஷெட்டி தமிழில் 12பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அதியா ஷெட்டியை, கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. இந்நிலையில் திருமணத்திற்கான மெஹந்தி விழா மும்பையில் அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடைபெற்றது.
கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it