1. Home
  2. ஆரோக்கியம்

தினமும் செம்பருத்திப் பூ தண்ணீர் குடித்து வந்தால்...

தினமும் செம்பருத்திப் பூ தண்ணீர் குடித்து வந்தால்...

. வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் செம்பருத்திப்பூ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்கள் செம்பருத்தி பூக்கள், இலைகள் மற்றும் தண்டுகளை உணவாகவும், பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பல்வேறு உணவுப் பொருட்களில் இந்த செம்பருத்திப்பூ பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்திப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ஜாம், ஜெல்லி, சாஸ், சிரப், தேனீர் இதெல்லாம் உலகம் முழுவதும் தற்பொழுது பிரபலம். குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் செம்பருத்திப் பூவை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. செம்பருத்தி செடியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் அந்தோசயனின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.


தினமும் செம்பருத்திப் பூ தண்ணீர் குடித்து வந்தால்...



பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் காணப்படும் உணவுகள் நம்முடைய உடலை ஆரோக்கியப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை அழிக்கின்றன. செம்பருத்தி பூ தண்ணீர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கிறது.

காலப்போக்கில் இது இதயத்தை அதிகம் பலவீனப்படுத்துகிறது. செம்பருத்தி பூ தண்ணீரை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது அதில் இருக்கக்கூடிய சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கும் என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது செம்பருத்திப்பூ. இரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்பு இதய நோய்க்கான மற்றொரு ஆபத்து காரணி.

செம்பருத்திப்பூ தண்ணீரை குடித்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. புரதங்களை உற்பத்தி செய்வது, பித்தத்தை சுரப்பது, கொழுப்பை உடைப்பது வரை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உங்கள் கல்லீரல் இன்றியமையாதது. செம்பருத்தி பூ தண்ணீரைத் தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது அது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அதை திறம்பட செயல்பட வைக்க உதவும் என ஆய்வுகள் சொல்கிறது.


தினமும் செம்பருத்திப் பூ தண்ணீர் குடித்து வந்தால்...

செம்பருத்தி பூ தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும்பொழுது அது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதைப் பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தொடர்ந்து செம்பருத்திப்பூ தண்ணீரை குடித்து வந்தவர்களுக்கு அவர்களுடைய உடல் எடை கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்க உதவும் கலவைகள் செம்பருத்திப்பூ தண்ணீரில் காணப்படுகிறது.

செம்பருத்தியில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது செம்பருத்திப்பூ தண்ணீர். பாக்டீரியாக்கள் ஒற்றை செல் நுண்ணுயிரிகளாகும். அவை மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரை பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். செம்பருத்தி பூ தண்ணீரில் காணப்படக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

செம்பருத்தி பூ தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்றால் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் செம்பருத்திப் பூக்களை போட்டு பூக்களில் இருக்கக்கூடிய சாறு இறங்கியதும் அந்தத் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி குடித்து வரும்போது பல நல்ல பலன்களை நம்முடைய உடலுக்கு கொடுக்கும்.

Trending News

Latest News

You May Like