1. Home
  2. தமிழ்நாடு

பழனி தண்டாயுதபாணி கோவிலில் எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தெரியுமா ?

பழனி தண்டாயுதபாணி கோவிலில் எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தெரியுமா ?

16 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 18-ம் தேதி துவங்கி, ஜனவரி 20-ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கும்பாபிஷேக விழாவில் எந்த நாளில் என்னென்ன வைபவம் நடைபெறும், ஜனவரி 27-ம் தேதி எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளது.

ஜனவரி 21-ம் தேதி ஆநிரை வழிபாடு, ஏழு பரி வழிபாடு சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுதல், 16 திருக்குடங்களில் திருமகளை எழுந்தருளச் செய்து, 16 வகை பொருட்கள், 16 மகளிர் வழிபாடு நடத்தப்பட உள்ளன.


பழனி தண்டாயுதபாணி கோவிலில் எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தெரியுமா ?



ஜனவரி 21-ல் ஆறுவகை பொருட்கள் கொண்டு வேள்வி வழிபாடு, ஜனவரி 22-ம் தேதி அரசமர வழிபாடு, நிலமகள் வழிபாடு, பூமி வழிபாடு ஆகியன நடத்தப்பட உள்ளன. ஜனவரி 23-ம் தேதியன்று பரிவார உப தெய்வங்களில் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது. ஜனவரி 24-ல் புனிநீர் வழிபாடு, புனித நூல் வழிபாடு ஆகியன நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து பலவித பூஜைகள், யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, ஜனவரி 27-ம் தேதி காலை 8.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி விமானத்திற்கும், 8.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களின் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

Trending News

Latest News

You May Like