இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்..ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்..ஏன் தெரியுமா?
X

மெதுவாக பந்துவீசியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், முதல் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி சம்பளத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போட்டிக்கான நேரம் குறித்து ஆய்வு செய்ததில், மூன்று ஓவர்களை குறிப்பிட்ட நேர இலக்கிற்குள் வீசவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து, போட்டி சம்பளத்தில் இருந்து ஒரு ஓவருக்கு தலா 20 சதவீதம் வீதம் மூன்று ஓவர்களுக்கும் 60 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் உத்தரவிட்டார். மெதுவாக பந்துவீசியது தொடர்பான குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். எனவே மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாது.


newstm.in

Next Story
Share it