1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்கள்..!!

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பில் 20 வயது மாணவனும் 16 வயது சிறுமியும் படித்து வந்தனர். இருவரும் ஒரே கிராமத்தில் வசித்தி வருகின்றனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள நினைத்தனர்.


பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்கள்..!!

இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்தனர். இதை கவனித்த பள்ளி ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக நிச்லௌல் காவல் நிலைய எஸ்எச்ஓ ஆனந்த் குமார் குப்தா கூறுகையில், மகாராஜ் பகுதியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Trending News

Latest News

You May Like