1. Home
  2. தமிழ்நாடு

அதிரடி உத்தரவு! பட்டியலினத்தவர் கொடி ஏற்றுவதை உறுதி செய்க!!

அதிரடி உத்தரவு! பட்டியலினத்தவர் கொடி ஏற்றுவதை உறுதி செய்க!!

குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியக் கடிதத்தில், எவ்வித புகார்களுமின்றி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிரச்னைக்குரிய 15 இடங்களில் சாதி பாகுபாடின்றி குடியரசு தின விழாவை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


அதிரடி உத்தரவு! பட்டியலினத்தவர் கொடி ஏற்றுவதை உறுதி செய்க!!

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like